tamilnih 37 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரணிலுடன் ஆலோசனை நடத்த பசில் வருகை

Share

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரணிலுடன் ஆலோசனை நடத்த பசில் வருகை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்தாலோசனையொன்றை நடத்த பசில் ராஜபக்‌ச இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுண கட்சியின் மூத்த அரசியல்வாதிகள் பலரின் வேண்டுகோளுக்கு அமையவே அவர் விரைவில் நாடு திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுஜன பெரமுண கட்சியை உருவாக்கிய பசில் ராஜபக்‌ச, கடந்த டிசம்பர் தொடக்கம் அரசியல் செயற்பாடுகளை விட்டும் தவிர்ந்து அமெரிக்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் கட்சியின் மூத்த அரசியல்வாதிகளை ஒதுக்கிச் செயற்படும் நாமல் ராஜபக்‌சவின் நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சிக்குள் எழுந்துள்ள பிளவுகள் தொடர்பில் பசில் நேரடியாக தலையிட்டு தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த அரசியல்வாதிகள் பலரும் வலியுறுத்தியிருந்தனர்.

அதனையேற்று நாடு திரும்பவுள்ள பசில் ராஜபக்‌ச, எதிர்வரும் இரண்டொரு வாரங்களுக்குள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேரடிக் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தவுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...