ரணிலிடம் காட்டமாகத் தெரிவித்த பசில்
மொட்டுக் கட்சிக்கு எதிராக – ரணிலுக்கு ஆதரவாக நிமால் லன்சாவால் உருவாக்கப்பட்டு வரும் கூட்டணிக்குத் தனது எதிர்ப்பை பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியைத் தனியாக நேரில் சந்தித்து இந்த எதிர்ப்பை அவர் வெளியிட்டுள்ளதாக தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“உங்களை ஜனாதிபதியாக்கியது மொட்டுக் கட்சி. அந்தக் கட்சியை அழிக்கும் வேலையைச் செய்ய வேண்டாம்” என்று ரணிலிடம் பசில் காட்டமாகக் கூறியுள்ளார் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a comment