நாடாளுமன்ற குழுத் தலைவராகிறார் பஸில்!

basil 1

நாடாளுமன்ற குழுத் தலைவராகிறார் பஸில்!

பொதுனஜன பெரமுவின் நாடாளுமன்ற குழுத் தலைவராக பஸில் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் அண்மையில் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதுடன் நிதியமைச்சராகவும் பதவியேற்றார்.

அவரை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நியமிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற குழுத் தலைவராக பஸில் ராஜபக்சவை அங்கீகரிக்கும் அறிவிப்பை சபாநாயகர் விரைவில் வெளியிடவுள்ளார் என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version