2 1
இலங்கைசெய்திகள்

யாழில் தனிமையில் இருந்த பெண் மீது சரமாரியான தாக்குதல்

Share

யாழில் தனிமையில் இருந்த பெண் மீது சரமாரியான தாக்குதல்

யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு குடத்தனை மேற்கு பகுதியில் தனிமையிலிருந்த பெண்மீது இனந்தெரியாத நபர்கள் சரமாரியான தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவமானது நேற்று (01.08.2024) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று அதிகாலையில் குடத்தனை மேற்கில் தனிமையில் தூக்கிக்கொண்டிருந்த 68 வயதுடைய வயோதிப் பெண்மீது தாக்குதல் நடாத்திய மர்ம நபர்கள் தங்க தோடு, தாலி ஆகியவற்றையும் கொள்ளையிட்டதுடன் அவரிடம் இருந்த பத்தாயிரம் ரூபா பணத்தையும் பறித்தெடுத்ததுடன் அவர்களது காணிகளின் உறுதி பத்திரங்களையும் கோரியுள்ளனர்.

குறிப்பாக அண்மையில் கொள்வனவு செய்த காணியின் உறுதிப் பத்திரத்தையும் கோரியுள்ளனர். அப்போது அச்சத்தில் அந்த முதிய பெண் உறுதிப் பத்திரத்தை காண்பிக்க அதனை தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.

மேலும், குறித்த பெண் அண்மையில் கொள்வனவு செய்த காணியில் புதிதாக வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பணிகள் இடம் பெற்றுவரும் நிலையில், அதற்கான பணம் எங்கே இருக்கிறது என்றும் கேட்டு மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக கொள்வனவு செய்த காணியில் இரவுக் காவலிற்காக தங்கியிருந்த கணவர் அதிகாலை 5 மணிபோல் தனது வீட்டிற்கு வந்தபோது தனது மனைவி இரத்த காயங்களுடன் கிடந்ததை கண்டு உடனடியாக அயலவர் உதவியுடன் மீட்டு பருத்தித்துறை அதார வைத்தியசாலையில் அனுமதுத்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
MediaFile 3
செய்திகள்இலங்கை

களனி கங்கை ஆற்றுப்படுகையில் நீர் மட்டம் உச்சம்: ஹங்வெல்ல பகுதியில் பெரும் வெள்ள அபாயம்!

களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்ததன் காரணமாக, ஹங்வெல்ல (Hanwella) மற்றும் அதனை...

images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...