19ஐ உடன் அமுலாக்க வேண்டும்! – சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்து

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 1 1

நாட்டின் நெருக்கடி நிலைக்குத் தீர்வு காண்பதற்காக 15 பேர் கொண்ட அனைத்துக் கட்சி அமைச்சரவையையும், அதற்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை சபை ஒன்றையும் நிறுவ வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான யோசனையை நேற்று கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் முன்வைத்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

* 20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி, 19ஆவது திருத்தச் சட்டத்தை உடன் அமுலாக்க வேண்டும்.

* நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை, குறிப்பிட்ட காலத்துக்குள் நீக்கப்பட வேண்டும்.

* நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டாலும், நிறைவேற்றப்பட்டாவிட்டாலும், தேசிய அரசை நிறுவி, குறைந்தபட்ச வேலைத்திட்டத்துடன் செயற்பட வேண்டும் என்ற யோசனைகளைத் தாம் முன்வைத்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version