செல்பி எடுக்க தடை!

செல்பி எடுக்க 444

மஹியங்கனை சுற்றுலா செல்வோர் அங்குள்ள ஆதிவாசிகளுடன் இணைந்து செல்பி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை ஆதிவாசிகளின் தலைவர் வன்னிய எத்தொ தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மஹியங்கனை தம்பானை கிராமத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

அவ்வாறு வருபவர்கள் சுகாதார வழிகாட்டல்களை கட்டாயம் பின்பற்றி செயற்படுவது அவசியம்.

மேலும் எந்தவொரு ஆதிவாசிகளுடன் இரண்டு மீற்றர் சமூக இடைவெளியைப் பின்பற்றியே உரையாட வேண்டும் எனவும் அவர்களுடன் இணைந்து செல்பி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version