24 666d6598d1422
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு! தனியார் துறையினருக்கும் வாய்ப்பு

Share

அரச ஊழியர்களின் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு! தனியார் துறையினருக்கும் வாய்ப்பு

நாம் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவை வழங்கினோம். தனியார் துறையினரும் அதை பின்பற்றியுள்ளனர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து நாம் எடுத்த நடவடிக்கைகளின் முதன்மையான பயனாளிகள் இலங்கையின் பொது மக்களே என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். அவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டார்கள்.

தொழிலை இழந்து, சொத்துக்களை அடகு வைத்து, நிலத்தை விற்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அதற்காகவே, பணம் கீழ் மட்டம் நோக்கிச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று நான் குறிப்பிட்டேன்.

ரூபாவை ஸ்திரப்படுத்துவதும், வட்டி விகிதங்களைக் குறைப்பதும் நன்மைகளில் ஒன்றாகியுள்ளது. உலக வங்கியின் உதவியுடன் சமூக நலன்புரி பயன்களை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளோம். 18 இலட்சம் குடும்பங்களில் இருந்து 24 இலட்சம் குடும்பங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அது மிகவும் கீழ் மட்டம் வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

நாம் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவை வழங்கினோம். தனியார் துறையினரும் அதை பின்பற்றியுள்ளனர். தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்கவும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து, அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு தடையுத்தரவு கோரி தோட்ட நிறுவனங்களால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

எனவே, குறைந்த பட்சத் தொகை கிடைக்கும் என்பதை உறுதி செய்துள்ளோம். மாவட்ட அபிவிருத்திக்கும் நிதி ஒதுக்கினோம். கிராமங்களில் வீதிகள் அல்லது கட்டிடங்களை நிர்மானிப்பதற்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் இவை வழங்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் உள்ள சிறு ஒப்பந்தக்கார்களுக்கும் மற்றும் ஏனையவர்களுக்கும் பணம் புழங்குவதற்காகத்தான். நியாயமான தொகை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...