நீர் விநியோகத்துக்கு தடை!

Water 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

அடுத்த மாதம் முதல், கட்டணம் செலுத்தத் தவறிய 40 சதவீதமான பாவனையாளர்களுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

8,000 மில்லியன் ரூபா வரை காணப்பட்ட நிலுவை தொகை, 4000 மில்லியன் ரூபாயாக குறைக்கப்பட்ட போதும் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மீண்டும் 6,000 மில்லியன் ரூபா கட்டணம் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கிணங்க, 60 நாட்களுக்கு மேல் கட்டணம் செலுத்த தவறிய அனைத்து பயனாளர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 8 இலட்சம் பாவனையாளர்கள் 90 நாட்கள் அல்லது அதற்கும் அதிக நாட்கள், நீர் கட்டணம் செலுத்த தவறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version