அரச அலுவலகங்களில் தொலைபேசி பாவனைக்கு தடை!!

Holidays for government offices

அலுவலக நேரத்தில் அலைபேசிகளைப் பயன்படுத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் அரச ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்தார்.

பொது நிர்வாக அமைச்சின் புதிய செயலாளராக திங்கட்கிழமையன்று (02) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், ஊழியர்கள் மத்தியில் உரையாற்றி போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

ஊழியர்கள் பலர் வேலை நேரத்தில் தொலைபேசியில் நேரத்தை வீணடிப்பதை தான் அவதானித்ததாகவும் காலையில் வேலையை ஆரம்பிக்கும் தொடங்கும் போது அதில் உள்ள பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளைப் பார்க்க வேண்டாம் என்று குறிப்பிட்டார்.

ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட அலைபேசியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாள் முழுவதும் தொலைபேசியில் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அதனால்தான் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு வரும்போது அலைபேசிகளை லொக்கரில் வைத்துவிட்டு போகும் போது எடுத்துச் செல்ல முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட வேண்டுமா என்பது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று தெரிவித்த அவர், தேவைப்பட்டால், அந்த நடவடிக்கையை எடுக்கநேரிடும் என்றும் தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version