உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்படும் என அரச அச்சக திணைக்களத்தின் தலைவர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
வாக்குச்சீட்டு அச்சடிக்கத் தேவையான பணம் இன்னும் அரச அச்சகத்துக்கு வரவில்லை என்று அவர் கூறுகிறார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்க அச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அடிப்படைப் பணிகளுக்காக 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணம் செலுத்த வேண்டியுள்ளது.
ஆனால் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக அரசாங்க அச்சகத்திற்கு இதுவரை 40 மில்லியன் ரூபாயே கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் நடவடிக்கைகளுக்காக 500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகம் கடந்த 8ஆம் திகதி நிதியமைச்சுக்கு அறிவித்துள்ளது.
#SriLankaNews

