ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்களை தலா 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 50 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க உத்தரவிட்டார்.
வழக்கு பெப்ரவரி 13ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.
துன்புறுத்தல்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர், கறுவாத்தோட்டப் பொலிஸாரால் நேற்று (14) பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.
#SriLankaNews