tamilni 1 scaled
இலங்கைசெய்திகள்ஜோதிடம்

ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் பிணை மனு தாக்கல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Share

ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் பிணை மனு தாக்கல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் விசாரணை ஜூலை 4 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இளைஞர் ஒருவரை கடத்திச் சென்ற வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை சவால் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.

இந்த பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஜூலை 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தலைமை சட்ட ஆலோசகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொடையில் கடத்தப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்ட அமில பிரியங்கரவை அச்சுறுத்தல், தாக்குதல் உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகளில் ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.

இந்த வழக்கில் ஹிருணிகா பிரேமச்சந்திர ஒன்பதாவது குற்றவாளி ஆவார்.

மேலும் நீதிமன்றம் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது 20,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...