” என்னை பற்றி ஜே.வி.பி. வெளியிட்ட தகவல் அரசியல் சேறு பூசும் நடவடிக்கையாகும்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பிணைமுறி மோசடி சம்பந்தமான பணம் என்னிடமும், எனது பிள்ளைகளிடமும் இருப்பதாக ஜே.வி.பியின் வசந்த சமரசிங்க கருத்து வெளியிட்டுள்ளார். இதனை முற்றாக நிராகரிக்கின்றேன். அவரிடம் தகவல்கள் இருப்பின், அந்த ஆவணங்களை இன்றே குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
அரச சொத்துகளை கொள்ளை அடித்திருந்தால் அல்லது முறையற்ற விதத்தில் சொத்து திரட்டியிருந்தால் தண்டனையை ஏற்க தயார்.” – என்றார்.
#SriLankaNews