சீரற்ற காலநிலை! – முல்லையில் பல குடும்பங்கள் பாதிப்பு

image fa9d16040d

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீட்டுத்திட்டம் கிடைத்தும் மீதிப்பணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் கட்டிய அரைகுறை வீட்டினை நம்பி தற்காலிக வீடுகளில் வாழும் மக்கள் தற்போது பருவமழையினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் சுமார் 1600 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கிவைக்கப்பட்ட போதும், அது வெறும் அத்திவாரத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து அந்த மக்களுக்கான மீதிப்பணம் கிடைக்காத நிலையில் தற்போதும் மக்கள் தற்காலிக கொட்டில்களில் மழைவெள்ளத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் உள்ள மயில் குஞ்சன் குடியிருப்பில் வாழ்ந்து வரும் மக்களே இவ்வாறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version