நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விடுக்கப்படும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்குமாறும், பொதுமக்களிடம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், சீரற்ற காலநிலையால் அனர்த்தங்கள் ஏற்படுமாயின் உடனடியாக 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
#sriLankaNews