வல்லை மதுபான சாலை கொலை! – இருவர் சரண், இருவர் தலைமறைவு!

IMG 20220503 WA0003

யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் அமைந்துள்ள மதுபான சாலையில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலையத்தில் கடந்த 3ஆம் திகதி இரவு இரு இளைஞர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தர்க்கம் போத்தல் குத்தில் முடிவடைந்ததில் திக்கம் பகுதியை சேர்ந்த குணசேகரம் குணசோதி (வயது 25) எனும் இளைஞன் உயிரிழந்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் நால்வரை அடையாளம் கண்டிருந்தனர்.

அவர்களை கைது செய்தவற்கு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் அல்வாய் பகுதியை சேர்ந்த இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , சரணடைந்துள்ள இருவரும் அன்றைய தினம் பிரதான சந்தேகநபருடன் மது அருந்திய நபர்கள் எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

Exit mobile version