மீண்டும் வரிசை!!!

image 5f78cf2a4e

அனைத்து வகையான எரிபொருட்களும் கிட்டத்தட்ட 100 ரூபாவால் குறைக்கப்படலாம் என்ற தகவல்கள் பரவிவருவதால் கொழும்பு உட்பட நாட்டில் பல பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் நீண்ட வரிசைகள் ஏற்படுகின்றன.

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் எரிபொருள் விலையில் கணிசமாக குறைக்கப்படும் என்ற அச்சத்தில் சில எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் புதிய முற்பதிவுகளை செய்யவில்லை என்பதால், வழமைக்கு மாறான வரிசைகள் காணப்படுகின்றன.

ஏப்ரல் மாத விலை திருத்தத்தின் போது அரசாங்கம் எரிபொருள் விலையை கணிசமாக குறைக்கும் என்று மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைவதன் காரணமாகவும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் குறைவினாலும் இலங்கையில் அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் குறைக்கப்படால் என்று தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Exit mobile version