சந்தேகநபர் இன்று வாக்குமூலம்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஆயிஷா படுகொலை: சந்தேகநபர் இன்று வாக்குமூலம்

Share

களுத்துறை மாவட்டம், பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், இன்று நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

சந்தேகநபரை நேற்று பாணந்துறை பிரதான நீதிவான் ஜயருவன் திஸாநாயக்க முன்னிலையில் பிரசன்னப்படுத்தியபோது, அவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் கோரியிருந்தனர்.

இந்தநிலையில், சந்தேகநபர் வாக்குமூலம் வழங்க அனுமதி கோரியதற்கமைய, மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் இன்று வாக்குமூலத்தை வழங்க நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.

இதற்கமைய, சந்தேகநபரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க பாணந்துறை பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

தற்போதைய நிலைமைக்கு மத்தியில், சந்தேகநபரை விசேட பாதுகாப்பின்கீழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

முறைப்பாட்டாளர் தரப்பின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழு முன்வைத்த சமர்ப்பணங்களை அடுத்து, நீதிவான் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபர் சார்பில், சட்டத்தரணிகள் எவரும் மன்றில் முன்னிலையாகவில்லை.

வழக்குப் பொருளாக, குறித்த சிறுமி கொலைசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அணிந்திருந்த ஆடை, பொலிஸாரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...