யாழில் வெள்ளை ஈ தாக்கம் அதிகரிப்பு!

20230419 115920

யாழ் மாவட்டத்தில் வெள்ளை ஈ தாக்கத்தினால் கிட்டத்தட்ட 5,000 தென்னைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 75 வீதமான தென்னைகளுக்கு கட்டுப்படுத்தல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தென்னை பயிற்செய்கைசபையின் வடபிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று புதன்கிழமை கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தினால் தென்னை  மரம் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றது இந்த வருடம் தை மாதம் 15 ம் திகதிக்கு பின்னர் வடக்கு மாகாணத்தில் அதுவும் யாழ்நகர  பகுதியில் ஆஸ்பத்திரி வீதியில் வெள்ளை ஈ தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக அதனை கட்டுப்படுத்தும் செயன்முறைகளை செயற்படுத்தினோம்.

ஆனாலும் அது பரவலடைந்து தற்பொழுது யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுகளிலும் பரவி உள்ளதாக அறிய கிடைக்கின்றது.

தொடர்ச்சியாக இந்த வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

கிட்டத்தட்ட யாழில்  1500 தென்னை மரங்களுக்கு இந்த கட்டுப்படுத்தல் செயற்திட்டத்தினை  மேற்கொண்டுள்ளோம். எனினும் வெள்ளை ஈ  தொடர்ச்சியாக பரவிக்கொண்டு செல்கின்றது,

வெள்ளை என்பது ஒரு வெள்ளை இலையான் என  குறிப்பிடலாம் இது  நான்கு வகைகளில்  உள்ளது. இது தென்னையை  மட்டும் தான் தாக்கும். இது கூடுதலாக முட்டை போட்டு குடம்பியாக்கி இனப்பெருக்கத்தை அதிகரித்து தென்னை மரத்தினுடைய அடி பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக செவ்விளனி மரங்களை கூடுதலாக தாக்குகின்றது.

ஒரு வீட்டில் இரண்டு மூன்று தென்னைமரங்களில் வெள்ளை ஈ தாக்கம் ஏற்படுமாக இருந்தால் தென்னை  வளம் முற்றாக பாதிக்க கூடிய சாத்திய கூறு காணப்படுகிறது.

வடக்கு மாகாணத்தில்  தற்பொழுது தென்னை வளம் சற்று பெருகி கொண்டு செல்கின்றது எனவே இந்த  வெள்ளை ஈ தாக்கம் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் – என்றார்.

#srilankaNews

Exit mobile version