மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த வேண்டாம்! பிரதமர் எச்சரிக்கை
இலங்கைசெய்திகள்

மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த வேண்டாம்! பிரதமர் எச்சரிக்கை

Share

மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த வேண்டாம்! பிரதமர் எச்சரிக்கை

சமஷ்டி அதிகாரத்தைக் கோருவதற்கு தமிழர்களுக்கு – தமிழ் கட்சிகளுக்கு உரிமை உண்டு, எனினும் அதனை வழங்குவதா இல்லையா என்பதை நாடாளுமன்றமும் அரசாங்கமும் மட்டுமே முடிவு செய்யும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

எனவே இது தொடர்பில் வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக தமிழர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை எழுந்தமானமாக நிராகரித்து விட முடியாது.

அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, அந்தத் தீர்வை வழங்குவதா, இல்லையா என்பது தொடர்பில் நாடாளுமன்றமும் – அரசாங்கமுமே முடிவு செய்ய முடியும்.

எனவே அதிகாரப் பகிர்வு தொடர்பில் விமர்சனக் கருத்துகளை முன்வைத்து நாட்டில் மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த வேண்டாம் என்று சகல தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு வருகை தரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமஷ்டி அதிகாரப் பகிர்வை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தரப்புகள் கோரிக்கை முன்வைத்து வருகின்றன.

இந்தநிலையில், “தமிழர்கள் கோரும் சமஷ்டியை ஒருபோதும் அரசாங்கம் வழங்காது. அதனைக் கோருவது பயனற்றது” என்று அரச தரப்பு ஆளும் கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...