முரண்பாடுகளை தவிருங்கள்!!

image ec18bad78f

நீதித்துறை மற்றும் அரசியலமைப்பிற்கு இடையில் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இலங்கை நீதிச் சேவைகள் சங்கம் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவின் பின்னர் நீதித்துறைக்கும் அரசியலமைப்பிற்கும் இடையில் தேவையற்ற மோதலை உருவாக்க நாடாளுமன்ற சிறப்புரிமைச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை நீதிச் சேவைகள் சங்கம்  உன்னிப்பாக அவதானித்து வருவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களின் இறையாண்மை அதிகாரங்களை செயற்படுத்தும் மூன்று முக்கிய நிறுவனங்களான பாராளுமன்றம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கிடையே சமநிலை பேணப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version