இலங்கையின் பேரழகு தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவி பெருமிதம்

17 4

இலங்கையின் கலாசாரத்தை பார்த்து நெகிழ்ச்சியடைவதாக அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட மகளீர் கிரிக்கெட் அணியின் தலைவி சமாரா டல்வின் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நடந்த போட்டியின் போது இலங்கை தொடர்பில் அவர் வெளியிட்ட தகவல்கள், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விளையாட்டு என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்கக் கூடிய முக்கிய கருவியாக சர்வதேச அளவில் பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள், நாட்டின் அடையாளமாக உள்ளன. அதன் கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக வேர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஒரு மேடையாகவும் வளர்ந்து வருகின்றன.

இலங்கையின் இயற்கை அழகு, கலாசார பன்மை மற்றும் மக்களின் நட்புறவு மிகவும் சிறப்பாக உள்ளது. இது சர்வதேச ரீதியில் இலங்கையின் மதிப்பை உயர்த்தும் வகையில் உள்ளது.

இலங்கையிற்கு வெளிநாட்டு அணிகள் வருகை தரும் போதெல்லாம், விளையாட்டு நிர்வாகிகள் நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு செழுமையை வெளிநாட்டு அணிகளுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

விமர்சனங்கள் இருந்தாலும், நாட்டின் பெயரை சர்வதேச ரீதியில் உயர்த்தும் ஒரு வகையான முயற்சியாக பார்ப்பதாக சமாரா டல்வின் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version