25 684921214c034
இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய பொதுமன்னிப்பு விவகாரம்! நீதிமன்றில் முன்னிலையாவாரா அதுல

Share

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பெற்ற பின்னர் சர்ச்சைக்குரிய வகையில் அனுராதபுரம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அதுல திலகரத்ன, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலுவையில் உள்ள மற்றொரு வழக்கு தொடர்பில் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது அவரைக் கைது செய்ய பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிதிமோசடி குற்றச்சாட்டின் பேரில் அனுராதபுரம் உயர் நீதிமன்றம் அதுல திலகரத்னவுக்கு சிறைத்தண்டனை விதித்திருந்தது.

மேலும், குறித்த வழக்கு தொடர்பில் பணிநீக்கம் காரணமாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (11) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை(அதுல திலகரத்ன) சட்டவிரோதமாக விடுவித்தது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில் அவர் அழைத்துவரப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...