யாழ் போதனாவிலும் கவனவீர்ப்பு போராட்டம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பகுதியில் ஒன்றுகூடிய வைத்தியர்கள் கையில் கறுப்புப்பட்டி அணிந்தவாறு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தியாவசிய மருந்துகள் இல்லை சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது, இலவச சுகாதாரம் இல்லாது ஒழிக்கப்படுகின்றது, இலவச மருத்துவம் ஆபத்தில் உள்ளது, மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை, மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம், சுகாதார வசதிகளை இல்லாதொழிக்க வேண்டாம் போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைத்தியர்களால் தாங்கி பிடிக்கப்பட்டது.

நாடு பூராகவும் அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்ப வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுவரும் ஹர்த்தாலிற்கு ஆதரவாகவே யாழ்ப்பாணத்திலும் இந்த போராட்டம் இடம்பெற்றது.

IMG 20220506 WA0085

#SrilankaNews

Exit mobile version