தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அபாயம் ஏற்பட அதிகமாக வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, அடுத்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச காற்றழுத்தம் அதிதீவிரமாக வடமேற்கு திசையில் நகரக்கூடும் என தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கக்கூடிய நிலை காணப்படுவதோடு 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
இவ் அதிகபட்ச மழைவீழ்ச்சியால் அபாயகரமான மண்சரிவுகள், நிலநடுக்கங்கள் நிகழக்கூடும்.
இதன்படி மொனராகலை, பதுளை, மாத்தளை, பொலநறுவை, அம்பாறை, முல்லைத்தீவு, அநுராதபுரம், மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 10 மாவட்டங்கள் அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த மாவட்டங்களில் துரிதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
#SriLankaNews