ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான முயற்சி ஒன்று மொட்டு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிய வந்துள்ளது.
சூரியன் எவ்.எம். வானொலியில் இன்று காலை ஒலிபரப்பான ‘விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டார்.
#SriLankaNews