9cOx20TX36DjsGwwCh9C 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தலைமன்னாரில் 3 மாணவிகள் கடத்தல் முயற்சி!

Share

தலைமன்னாரில் 3 மாணவிகள் கடத்தல் முயற்சி!

தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களுக்கான அடையாள அணிவகுப்பில் மூன்று சிறுமிகளும், இரு சந்தேகநபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர்.

தலைமன்னார் பகுதியில் மூன்று சிறுமிகளை வெள்ளை வாகனம் ஒன்றில் கடத்த முற்பட்டதாக இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கான வழக்கு விசாரணை மீண்டும் நேற்று (18.05.2023) மன்னார் நீதவான் நீதிமன்றில் நீதிபதி கே.எல்.எம்.சாஜூத் முன்னிலையில் அழைக்கப்பட்டு, சந்தேகநபர்களை அடையாளம் காட்டுவதற்காக நீதிமன்றம் மூடப்பட்ட நிலையில் அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது.

இதன்போது பாதிப்புகளுக்கு உள்ளான மூன்று சிறுமிகளும் இரு சந்தேகநபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர்.

நடைபெற்ற இந்த அடையாள அணிவகுப்பு ஒரே நேரத்தில் இரு சந்தேகநபர்களுடன் மேலும் 14 பேர் இந்த அணிவகுப்பில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நீதவான், முதலியார், ஆராய்ச்சி மற்றும் இவ்வழக்குக்கு முன்னிலையாகும் சட்டத்தரணிகள் மட்டுமே மன்றுக்குள் இருந்த நிலையில் இச்சிறுமிகள் சந்தேகநபர்களை அடையாளம் காட்டியுள்ளனர்.

கடந்த 11.05.2023 அன்று வியாழக்கிழமை மாலை தலைமன்னார் கிராம பகுதியில் சிலுவை நகர் பகுதியில் வெள்ளை வாகனம் ஒன்றில் இனிப்பு பொருட்களை விற்பனைக்காக சென்றதாக கூறப்படும் இருவர், மூன்று சிறுமிகளுக்கு இனிப்பு பொருட்களை தருவதாக அழைத்து அவர்களை கடத்த முற்பட்டதாக தெரிவித்து இவர்களை அக்கிராம மக்கள் பிடித்து தலைமன்னார் பொலிஸில் ஒப்படைத்திருந்திருந்தனர்.

சந்தேகநபர்கள் சார்பாக சட்டத்தரணிகள் சர்மினி பிரதீபன், அர்ஜுன் அரியரட்ணம், ரூபன்ராஜ் டபேரா மற்றும் டெனிஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகினர்.

இச்சந்தேகநபர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...