சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி!
இலங்கைசெய்திகள்

சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி!

Share

சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி!

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார்.

அண்மையில் மன்னம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும் மட்டக்களப்பில் இயங்கி வரும் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகளின் பிரச்சினை தொடர்பாகவும் இன்றைய தினம் (17.06.2023) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது வீதி போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி, 10 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் இதில் அரசியல் பின்னணி இருப்பதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஆகவே இன்றைய தின ஆர்ப்பாட்டத்தின் போது, சட்ட விரோதமான முறையில் இயங்கி வரும் பேருந்துகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரியின் அசமந்த செயற்பாட்டின் காரணமாக இன்று 11 உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.

குறித்த விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குப் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் போது, உள்நுழைந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை தாக்குவதற்கு முற்பட்டுள்ளனர்.

இதனையடுத்து போராட்டக்காரர்களால், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் இருவரை நையப்புடைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

இன்றைய தினம் பொலிஸாரின் உதவியுடன் சாணக்கியன் இராசமாணிக்கம் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்களையும் சோதனை செய்துள்ளார்.

ஒழுங்கான முறையில் விதிப்போக்குவரத்து அனுமதிப் பத்திரங்கள் இன்றி போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்ற காரணத்தினால் குறுந்தூர பேருந்து சாரதிகளுக்கும் நெடுந்தூரப் பேருந்து சாரதிகளுக்கு இடையிலே போட்டித் தன்மை காரணமாகவே இந்த விபத்துக்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...