q
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்!

Share

பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் இன்று அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர்.

கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைப் பொலிஸார் கலைத்தனர்.

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பேராதனை – கலஹா சந்தி வரை மாணவர்கள் பேரணியாகச் செல்ல முற்பட்டபோது பொலிஸாரால் இவ்வாறு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஊரடங்கு உத்தரவை மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் அதற்கு எதிராகத் தாம் நடவடிக்கைகளை எடுத்தனர் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...