” அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்ற இடத்துக்கு சட்டவிரோதமாக நுழைவதற்கு தலைமை வழங்கியவர் மற்றும் அந்த செயற்பாட்டுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் வழக்கு தொடுப்பதற்காக பூரண விசாரணைகளை முன்னெடுக்கவும்.”
இவ்வாறு சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்னம், பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசமைப்பின் பிரகாரம் மக்களுக்கு உள்ள உரிமைகளை சவாலுக்குட்படுத்த முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#SriLankaNews