யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு புகுந்து வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியதில் பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்தினர் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் கோண்டாவில் வீட்டினுள் இன்று மாலை 10 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்று புகுந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டுக்கு அருகில் இடம்பெற்ற மரணச் சடங்கில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இரண்டு குழுக்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது மோதலாக மாறியுள்ளது.
அதன் பின்னணியில் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்துச் சேதமாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
கும்பலின் தாக்குதலுக்கு இலக்காகி நான்கு பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment