அறுகம்பை தாக்குதல் எச்சரிக்கை : டெல்லியின் புலனாய்வும் கொழும்பு கைதுகளும் !
அறுகம்பை (Arugam Bay) பகுதியில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அமெரிக்கா (America) எச்சரிக்கை விடுத்திருந்தாலும் இதன் பிண்ணனியில் இந்தியாவிற்கும் (India) பங்குள்ளது என்பது தற்போது பகிரங்கமாகியுள்ளது.
காரணம், 2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட முன்னர் விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கையை போல இம்முறையும் அறுகம்பை தாக்குதல் திட்டம் குறித்து இந்திய (india) புலனாய்வு அமைப்புகளால் இலங்கை (sri lanka) பாதுகாப்புப் படையினருக்கு முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுகம்பை பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் (Israel) மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாகவும் குறித்த தாக்குதல் ஒக்டோபர் 19 முதல் 23 வரை நடத்தப்படலாம் எனவும் இந்திய உளவு அமைப்புகள் எச்சரித்திருந்தன.
இந்தநிலையில், குறித்த தாக்குதல் விவகாரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் (Jaffna) – சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரையும் மற்றும் ஈராக்கைச் (Iraq) சேர்ந்த ஒருவரையும் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.