ATM மோசடி – இளைஞன் கைது

banks atm overdraft fees

Hand of man with credit card, using a ATM

குருநாகல் நகரில் மேற்கொள்ளப்பட்ட ATM கொள்ளை சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொட்டிகாபால பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், நேற்று (29) 6 வங்கி அட்டைகளுடன் குருநாகலில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ.டி.எம் இயந்திரத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி அவர்களின் பின் இலக்கங்களைப் பெற்று வங்கி அட்டைகளை மாற்றிக் கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபரை இன்று (30) குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version