10 8
இலங்கைசெய்திகள்

கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: கிளப் வசந்தவின் மனைவி தொடர்பில் புதிய தகவல்

Share

கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: கிளப் வசந்தவின் மனைவி தொடர்பில் புதிய தகவல்

அண்மையில் அத்துருகிரியில் சுட்டுக்கொல்லப்பட்ட வசந்த பெரேராவின் மனைவி பொது நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொலையுடன் தொடர்புடைய பெண் உட்பட மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கடந்த ஜூலை 8 ஆம் திகதி அத்துருகிரியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபர்கள் 7 பேரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் ஜூலை 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான நீண்ட விசாரணையின் பின்னர், கொலையுடன் தொடர்புடைய பெண் உட்பட மேலும் பல சந்தேகநபர்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கொலையின் பின்னர் துப்பாக்கிச்சூட்டைநடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்காக விசேட பேருந்து ஒன்றை தயார் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் தமது குழுவினருடன் இணைந்து 6 மாத காலத்திற்கு 6 இலட்சம் ரூபாவை செலுத்தி அத்துருகிரிய பிரதேசத்தில் வாடகை வீடொன்றையும் பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
19 5
உலகம்செய்திகள்

உக்ரைன் நகரில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்: குடியிருப்பு பகுதிகள் குறி..கெர்சன் குற்றச்சாட்டு

உக்ரைனின் தெற்கு நகரில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். தெற்கு உக்ரைன்...

18 5
உலகம்செய்திகள்

போருக்கு மத்தியில்… ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த கிழக்காசிய நாடு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலுக்கு முன்னர் ஏற்றுமதிகள் துரிதப்படுத்தப்பட்டதால், ஜூன் மாதத்தில் ஈரானில் இருந்து...

16 7
உலகம்செய்திகள்

பிரான்ஸ் விமான விபத்து: முன்னாள் ராணுவ தளபதி, தம்பதியர் பலி

பிரான்சில் நிகழ்ந்த விமான விபத்தொன்றில், முன்னாள் ராணுவ தளபதி ஒருவர் மற்றும் ஒரு தம்பதியர் என...

15 7
இலங்கைசெய்திகள்

கொழும்பு டொக்கியார்ட்டின் பங்குகளை வாங்கப்போகும் இந்திய நிறுவனம்

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எம்.டி.எல் என்ற மசகான் டொக் ஷசிப் பில்டர்ஸ், கொழும்பு டொக்கியார்ட் பி.எல்.சியின்...