2 16
இலங்கைசெய்திகள்

கிளப் வசந்த விவகாரம்: கொலையாளிகள் தொடர்பில் விசாரணை குழுக்கள் சந்தேகம்

Share

கிளப் வசந்த விவகாரம்: கொலையாளிகள் தொடர்பில் விசாரணை குழுக்கள் சந்தேகம்

அத்துருகிரியவில் கிளப் வசந்த உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களும் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என விசாரணை குழுக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இவர்கள் தென் கடற்பகுதியிலிருந்து படகில் நாட்டை விட்டு தப்பிச்சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.

இந்த வாடகை கொலையாளிகள் தப்பிச்சென்றுள்ளதாக தகவல் கிடைத்த பல இடங்களில் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சோதனையிட்ட போதிலும் அவர்கள் தொடர்பில் எவ்வித தடயமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துருகிரிய பிரதேசத்தில் (08) திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய இருவரும் பாதுகாப்புப்பிரிவில் இருந்தவர்கள் என சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது

மேலும், கிளப் வசந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 10 பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த தாக்குதலுக்கு பல்வேறு வழிகளில் ஆதரவளித்த 07 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களோ அல்லது அதை திட்டமிட்டவர்களோ இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...