பணம் கொடுக்க மறுத்த வைத்தியர் ஒருவரை யாசகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் தலங்கமையில் இடம்பெற்றுள்ளது.
பல்பொருள் அங்காடிக்கு அருகில் இரத்தக் காயங்களுடன் விழுந்து கிடந்த குறித்த வைத்தியர் தலங்கம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
மாலபே, பொத்துஅராவ வீதியில் வசிக்கும் 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் பல்பொருள் அங்காடியிலிருந்து வெளியேறும்போது அருகிலிருந்த யாசகருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் யாசகர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார். அவரைக் கைதுசெய்வதற்கான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment