மீண்டும் வரிசை யுகம்: வங்கிகளுக்கு முன்பாக குவியும் மக்கள்

tamilnid 26

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான விண்ணப்பப்டிவங்களை பெற நாடு முழுவதும் அரச வங்கிகளுக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட விடுமுறை காரணமாக கடந்த வார இறுதியில் மூடப்பட்ட அரச வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து, அந்த வங்கிகளின் முன் வரிசைகள் உருவாகியுள்ளன.

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு தேவையான வங்கிக் கணக்குகளை திறப்பதற்காக சமூர்த்தி மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற வங்கிகளுக்கு அருகில் இவ்வாறு நீண்ட வரிசைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அஸ்வெசும நிவாரண வேலைத்திட்டத்துக்காக ஜனவரி மாதத்தில் மீண்டும் விண்ணப்பம் கோருவருவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போதுள்ள 20 இலட்சம் என்ற வரையறையை 24 இலட்சம் வரை அதிகரிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version