விடுதலைப் புலிகள் இலங்கையர்கள் என்ற ரீதியில் எம்மால் பெருமைப்பட முடியும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின் போதே இவர் இதனை தெரிவித்தார்.
இம்முறை வரவு செலவு திட்டத்தில் இராணுவப் பாதுகாப்புக்காக முன்னரை விடவும் 30 மில்லியன் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் யுத்த சூழல் நிலவாத காலத்தில் அதிக தொகை ஒதுக்கீடு சார்ந்து சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,
இது அர்த்தமற்ற கேள்வியாகும். யுத்தம் நிலவா விட்டாலும் நாட்டின் இராணுவத்தை பலமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
75 ஆயிரம் பேர் கொண்ட இந்திய இராணுவத்தினரால் வெறுமனே 2,500 போராளிகளை கொண்ட விடுதலைப் புலிகளுடன் தாக்குபிடிக்க முடியாது போன வரலாறும் எமக்கு உள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்டினார்.
#SriLankaNews
1 Comment