பிடிவிறாந்து விதிக்கப்பட்ட நபர் போதைப்பொருளுடன் கைது!

202104050046437788 137 people arrested for alcoholism SECVPF

மல்லாகம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பிடிவிறாந்து விதிக்கப்பட்டு நீண்ட காலமாக பொலிசாரினால் தேடப்பட்டு வந்த குருநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் குருநகர் ஐந்து மாடி பகுதியில் வைத்து யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட புலனாய்வு பிரிவிருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் 5 மாடி பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

2021 ஆண்டு ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில் மல்லாகம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில்மல்லாகம் நீதிமன்றால் பிடிவிறாந்து விதிக்கப்பட்டிருந்த நிலையில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்திருந்த குறித்த நபர் தலை மறைவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version