கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற சிற்றூழியர் பிணையில் விடுதலை

tamilni 501

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற சிற்றூழியர் பிணையில் விடுதலை

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் இருவரிடம் தவறான முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற சிற்றூழியர்கள் மூவரில் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், நாடாளுமன்றத்தில் பணியாற்றிய சிற்றூழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று (30.01.2024) கடுவெல நீதவான் நீதிமன்றில் மூவரும் முன்னிலைப்படத்தப்பட்ட போது தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டார உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், சம்பவம் இடம்பெற்று ஒரு வருடத்திற்கு பின் இது தொடர்பான முறைப்பாடு பொலிஸில் அளிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு பொறுப்பான நீதவான் உத்தரவிட்டார்.

Exit mobile version