tamilni 501 scaled
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற சிற்றூழியர் பிணையில் விடுதலை

Share

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற சிற்றூழியர் பிணையில் விடுதலை

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் இருவரிடம் தவறான முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற சிற்றூழியர்கள் மூவரில் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், நாடாளுமன்றத்தில் பணியாற்றிய சிற்றூழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று (30.01.2024) கடுவெல நீதவான் நீதிமன்றில் மூவரும் முன்னிலைப்படத்தப்பட்ட போது தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டார உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், சம்பவம் இடம்பெற்று ஒரு வருடத்திற்கு பின் இது தொடர்பான முறைப்பாடு பொலிஸில் அளிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு பொறுப்பான நீதவான் உத்தரவிட்டார்.

Share
தொடர்புடையது
Screenshot 2025 11 07 135358
இலங்கைஅரசியல்செய்திகள்

2026-ஆம் ஆண்டு வீட்டுத் திட்டங்களை விரைந்து முடிக்க ஜனாதிபதி உத்தரவு!

2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலக்கெடுவுக்குள்...

ghana prophet 1767289486
செய்திகள்உலகம்

2025-ல் உலகம் அழியும்: பேழை கட்டி மோசடி செய்த கானா நாட்டுத் தீர்க்கதரிசி கைது!

2025 டிசம்பர் 25 அன்று விவிலிய காலத்தைப் போன்ற ஒரு பெரும் ஜலப்பிரளயம் ஏற்பட்டு உலகம்...

images 5
இந்தியாசெய்திகள்

போதைப்பொருள் வேட்டை: ஆந்திராவில் பெண் தாதா கைது! பெங்களூரு தொழிற்சாலைகளில் ரூ. 55 கோடி சிக்கியதா?

தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களை மையமாகக் கொண்டு இயங்கிய பாரிய போதைப்பொருள் கடத்தல்...

251021 Sanae Takaichi rs 9c18b6
உலகம்செய்திகள்

ஜப்பானிய பாராளுமன்றத்தில் வினோதப் போராட்டம்: பெண் எம்.பி.க்கள் கழிப்பறை கேட்டு மனு!

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் சனே டக்காயிச்சி (Sanae Takaichi) தலைமையிலான அரசாங்கத்தில், பெண் பாராளுமன்ற...