15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் கடத்தியவர் கைது!

image f0d2cd0f5c

15 கோடியே 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 7 கிலோ கிராம் நிறையுடைய தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முயன்றபோது கைப்பற்றப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளியேறியபோது,  போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவு அதிகாரிகளால் இவை கைப்பற்றப்பட்டன.

டுபாயில் இருந்து நேற்று (07) வந்த விமானத்திலேயே தங்கம் கடத்தப்பட்டுள்ளது.  மரு​தானை பிரதேசத்தை சேர்ந்தவர் 43 வயதானவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அவ்வப்போது விமானத்தில் பயணம் செய்யும் வர்த்தகர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version