25 67a4551799549
இலங்கைசெய்திகள்

மீளப் பெறப்பட்ட டயானா கமகேவின் பிடியாணை

Share

புதிய இணைப்பு
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்து முன்னிலைப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டயனா கமகே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்னிலையானதைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணையை மீளப் பெற உத்தரவிட்டது.

முதலாம் இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை (Diana Gamage ) உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி (Thanuja Lakmali) இன்று (06.02.2025) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சிஐடியில் குற்றப்பத்திரிகை தாக்கல்
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியமை குறித்து இவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் செல்லுபடியாகும் விசா இல்லாமல் தங்கியிருப்பது மற்றும் குடிவரவு மற்றும் குடியேற்ற அதிகாரிகளுக்கு தவறான அறிக்கைகளை வழங்குவது உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (Cid) டயானா கமகேவுக்கு எதிராக 07 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...