இராணுவச் சிப்பாய் சுட்டுத் தற்கொலை! – சுமந்திரனின் வீடு அருகே சம்பவம்

இராணுவச் சிப்பாய் சுட்டுத் தற்கொலை 1

கொழும்பு, வெள்ளவத்தையில் இராணுவச் சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வெள்ளவத்தை – தயா வீதிக்கருகில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்துக்குச் செல்லும் ஒழுங்கையை அண்டி காவலுக்கு நின்ற இராணுவச் சிப்பாய்களில் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

#SriLankaNews

Exit mobile version