shavendrasilva 1
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கையை மீட்க இராணுவம் தயார்! – சவேந்திர சில்வா அதிரடி அறிவிப்பு

Share

“இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்க இராணுவத்தினரான எம்மால் முடிந்த சகல ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொடுத்து வருகின்றோம். எமக்கான சரியான வாய்ப்பு வழங்கப்பட்டால் நாம் செய்து காட்டுவோம்” என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“அதிகளவான பகுதிகளில் இராணுவம் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றது. அதேபோல் இராணுவத்துக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய தேசிய உற்பத்தி செயற்பாடுகளிலும் இராணுவம் ஈடுபட்டு வருகின்றது.

கொரோனா வைரஸ் பரவல் நிலைமைகளின்போதும் இராணுவம் பாரிய சேவையை செய்தது. தற்போதும் பல்வேறு நெருக்கடி நிலைமைகளிலிருந்து மக்களை மீட்கவும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எம்மாலான சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க முடியும். அதற்கு எமக்கான சரியான வாய்ப்பு வழங்கப்பட்டால் செய்து காட்டுவோம். எம்மால் முடியாது என்று ஒன்றுமே இல்லை.

எந்தச் சவால்களையும் சந்திக்க நாம் தயாராகவுள்ளோம். எனினும், மக்கள் ஐக்கியமும், ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...