இலங்கை இராணுவத்தின் சில உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு
போர் வெற்றியின் 15ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் சில உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தன்னார்வ படையணிகளைச் சேர்ந்த 114 அதிகாரிகளுக்கும், 1395 படைவீரர்களுக்கும் உதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
படையினர் மற்றும் அதிகாரிகள் அவர்களது அடுத்த பதவி நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
போர் முடிவடைந்து பதினைந்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.