3 27
இலங்கைசெய்திகள்

பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா எம்.பி

Share

பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

குறித்த பதிவில், “என் வாழ்க்கையில் யாருடனும் வம்பு சண்டைக்கு போனதில்லை. துஷ்டனை கண்டால் தூர விலகு என்று என் தந்தை தெளிவாக சொல்லித் தந்திருக்கிறார்.

கடந்த சம்பவம் ஒரு துன்பியல் சம்பவம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை விட ஒரு வைத்தியராக மனதுக்குள் ஒரு ஆழமான கவலையை உண்டாக்கி இருக்கிறது.

காயங்களுக்கு மருந்திடும் கைகளால் காயத்தினை ஏற்படுத்தி இருக்கின்றேன். ஒரு பெண்ணை இழிவுபடுத்தி காவாலித்தனம் செய்யும் போது பொறுமையும் ஒரு தடவை செத்து போய்விடுகிறது. ஆழமான வலிகளுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் உள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றில் உணவருந்த சென்ற வேளை அங்கு உணவருந்திக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தன்னுடன் வாக்குவாதப்பட்டு, தன்னை பீங்கானால் தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர் காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த நபரே தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்திருந்த பின்னணியில் தற்போது தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...