அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை அதிபர் மற்றும் அவரது 22 வயது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எப்பாவல பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஹோட்டல் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் எப்பாவல பகுதியைச் சேர்ந்த 54 மற்றும் 22 வயதுடையவர்கள்.
சந்தேக நபர்கள் நீண்ட காலமாக இந்தக் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும், இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.