யாழ்ப்பாணம் – மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இரண்டாம் கட்டத்தின் கீழ் துறைமுகத்தின் பகுதிகளை ஆழ, அகலம் ஆக்குதல், படகுகளை கட்டிவைக்க ஏற்றவாறு ஆழமாக்கி குறித்த பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் தொழிலை மேம்படுத்துவதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தொழில் செய்யும் மீனவர்கள் தங்குவதற்கான வசதி, சிற்றுண்டிச்சாலை படகுகள் கட்டுவதற்கும் திரும்பிச் செல்வதற்கான பாதைகளை அமைத்தல், துறைமுகத்தை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேலைத் திட்டங்களும் இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்து மூன்றாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது குறிப்பிட்டார்.
குறித்த ஆரம்ப நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சிவஸ்ரீ அமைச்சின் செயலாளர்கள் நீரியல் வழங்கல் திணைக்கள அதிகாரிகள், மீனவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#SrilankaNews
Leave a comment