வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி – மூளாய் வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று பகல் தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன.
வீட்டில் உள்ளவர்கள் நேற்றையதினம் யாழ். மாநகர முதல்வரின் திருமண சடங்கிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தவேளை நகை களவாடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் குறித்த திருடனை பிடிப்பதற்கு வலைவீசி வருகின்றனர்.
#SrilankaNews
Leave a comment